2020ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது – மஹிந்த
2020ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை இலங்கை அரசாங்கம் செலுத்திவிட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடும் கடன் நெருக்கடியில் உள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்கட்சியினர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதைய நிர்வாகம் கடன் விவகாரத்தினை சிறப்பாக கையாண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020 முதல் இலங்கை 4200 அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனாக செலுத்தவேண்டியிருந்தது. எனினும் 2020இற்கான கடன்களை செலுத்திவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
வலுவான பொருளாதார திட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாகவே இதனை செய்ய முடிந்தது என்றும் அரசாங்கம் தேவையற்ற இறக்குமதிகளுக்கு தடை விதித்ததுடன், தேவையற்ற வெளிநாட்டு கடன்களை இடைநிறுத்தவும் தீர்மானித்தது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.