
ஸ்ரீலங்கா இராணுவத்தில் முதல் முறையாக புதிய படைப்பிரிவு!
ஸ்ரீலங்கா இராணுவம் முதல் முறையாக ட்ரோன் படைப்பிரிவை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இன்று இந்த படைப்பிரிவின் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த ட்ரோன் படைப் பிரிவின் மூலம் வான் பரப்பு ஊடாக நிலத்தை கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா விமானப்படை மற்றும் கடற்படையினருக்கு இதன் ஊடாக ஒத்துழைப்புகளை வழங்க உள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.