போகம்பறை சிறைச்சாலை கைதிகள் சிலர் கூரையின் மீதேறி போராட்டம்

போகம்பறை சிறைச்சாலை கைதிகள் சிலர் கூரையின் மீதேறி போராட்டம்

 

தங்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்த வேண்டும் என கோரி போகம்பறை சிறைக் கைதிகளில் சிலர் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர்

அவர்கள் இன்று முற்பகல் முதல் இவ்வாறு கூரை மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக வெலிக்கடை, போகம்பறை, குருவிட்ட உள்ளிட்ட சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் சிலருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

எனவே ஏற்பட்டுள்ள கொவிட் 19 அச்சம் காரணமாக போகம்பறை சிறைச்சாலையின் கைதிகள் தங்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்த வேண்டும் என கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.