முகக்கவசம் அணியாத 21 பேருக்கு ஏற்பட்ட நிலை! 10,000 அபராதம்

முகக்கவசம் அணியாத 21 பேருக்கு ஏற்பட்ட நிலை! 10,000 அபராதம்

முகக்கவசம் அணியத் தவறியதற்கும், பொதுவில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கத் தவறியதற்கும் கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் 21 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த குற்றங்களுக்காக அக்டோபர் 29 ஆம் திகதி முதல் இன்று வரை மொத்தம் 158 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் சுகாதார விதிமுறைகளை அமல்படுத்துவதற்காக நாடு முழுவதும் சிவில்உடை அணிந்த பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகள் எனக் கருதப்படும் சந்தேகநபர்களுக்கு ரூ .10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆறு மாதங்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் பிரதிப்பொலிஸ்மா அதிபர் வலியுறுத்தினார்.

இதன்படி பொது மக்கள் எப்போதும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் சமூக விலகல் விதிகளை பொதுவில் மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.