
தேசிய அளவிலான வீடமைப்புத் திட்டத்தை ஒரே நேரத்தில் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
நாட்டின் பல பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் ஏழைகள்,நடுத்தர மற்றும் உயர் வருமானம் பெறுவோருக்கு வீடமைப்புத் திட்டங்களை ஒரே தடவையில் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கட்டுமானத் துரை நிபுணர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
புதிய தொழில்நுட்பங்களை உபயோகித்து ஆக்கப்பூர்வமான முறையில் சுற்றாடலைப் பாதுகாக்கும் வகையில் நிர்மானப் பணிகளை விரைவு படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
10 கட்டுமான துரை நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
மேலும், எதிர்வருகின்ற மூன்று வருடங்களில் மத்தியத் தர வர்க்கத்தினருக்காக 15ஆயிரம் வீடுகள் நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறைந்த மற்றும் உயர் வருமானம் பெறுவோருக்கு நான்கு ஆண்டுகளில் 36ஆயிரத்து 884 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
பேலியகொடை, கொலன்னாவ, ப்ளுமெண்டல், கொட்டாவை மாகும்புர, கொட்டாவ பழதுருவத்த, பொரலஸ்கமுவ ஆகிய நகரங்களை மையப்படுத்தி இத்திட்டத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் நடை பெறவுள்ளது.
மேலும், மாலபே, கண்டி கெடம்பே மற்றும் அநுராதபுர நகரங்களை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப் பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.