தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்காக நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுப்பு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்காக நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுப்பு

திவுலப்பிட்டி பிரதேசத்தில் மீண்டும் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் பதிவான பின்னர், அக்டோபர் மாதத்திலும், நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலும் தமது வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான ரூபா. 10,000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் அடங்கிய நிவாரண பொதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 43,376 குடும்பங்களுக்காக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலப்பகுதிக்குள் தமது வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டிய குடும்பங்களுக்காக நிவாரணத்தை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இந்த காலப்பகுதிக்குள் ரூபா. 5000 கொடுப்பனவு பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 9 ஆயிரத்து 578 ஆகும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.