நாட்டில் நேற்றைய நாளில் மாத்திரம் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் நேற்றைய நாளில் மாத்திரம் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவு

கொவிட்-19 தொற்று நோயின் காரணமாக நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 5 மரணங்கள் பதிவாகியதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனையில், அவருக்கு கொவிட் 19 தொற்று அதிகரித்தமையால் உயர் குருதி அழுத்தம் ஏற்பட்டு அதனால் விளைந்த மாரடைப்பால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 11 பகுதியை சேர்ந்த 40 வயதான ஆண் ஒருவர் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தார்.

தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததுடன் பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே கொவிட் 19 தொற்றுறுதியாகிமை தெரியவந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட் 19 தொற்றின் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் இந்த மரணம் சம்பவித்துள்ளது.

அத்துடன் களனி பகுதியை சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவரும் கொவிட் 19 தொற்றால் மரணமானார்.

கடந்த முதலாம் திகதி ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

அதேநேரம் பாணந்துறை பகுதியை சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவரும் கொவிட் 19 தொற்றால் மரணமடைந்தார்.

காவல்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரதே பரிசோதனையில் கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட மரடைப்பால் அவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

அத்துடன் இம்புல்கொட பகுதியை சேர்ந்த 63 வயதான பெண்ணொருவரும் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தார்.

இவர் உயிரிழந்தன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே அவருக்கு கொவிட் 19 தொற்று இருந்தமை தெரியவந்துள்ளது.

லியூக்கேமியா நோய் தீவிரமடைந்து இந்த மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நாட்டில் நேற்றைய தினம் 625 பேருக்கு புதிதாக கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் 5 ஆயிரத்து 121 கொவிட்-19 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் தொடர்;ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, திவுலுபிட்டிய ஆடைத்தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன்சந்தை கொவிட் கொத்தணிகளில் இருந்து அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 858 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொவிட்-19 தொற்றிலிருந்து நேற்று மேலும் 646 பேர் குணமடைந்துள்ளதற்கு அமைய குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரித்தள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாண போதன வைத்தியசாலையில் நேற்று 347 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக மருத்துவமனையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.