கொழும்பில் பிரபல தனியார் வானொலியின் பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா

கொழும்பில் பிரபல தனியார் வானொலியின் பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா

உலக வர்த்தக மைய கட்டடத்தில் இயங்கும் தனியார் வானொலிச் சேவையொன்றின் பணியாளர் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வானொலியின் பணியாளர் ஒருவருக்கு நேற்றையதினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஏனைய மூவருக்கும் இன்றையதினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கோவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.

குறித்த பணியாளர்கள் மட்டக்குளிய மற்றும் ஜிந்துப்பிட்டி பகுதிகளில் வசிப்பவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தொற்றுக்கிலக்கான நால்வரும் ஆண் பணியாளர்கள் எனவும் அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும் மற்றயவர் வவுனியாவைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மற்றைய இருவரும் குறித்த வானொலியில் நூலகம் அல்லது ஆவணக்காப்பகத்தில் பணியாற்றுபவர்கள் எனவும் அவர்கள் இருவரும் சிங்களவர்கள் எனவும் மேலும் தெரியவருகிறது.