தீபாவளி தினத்தை முன்னிட்டு விதிக்கப்பட்ட இறுக்கமான கட்டுப்பாடு

தீபாவளி தினத்தை முன்னிட்டு விதிக்கப்பட்ட இறுக்கமான கட்டுப்பாடு

வரவிருக்கும் தீபாவளி திருநாளைக் கருத்தில் கொண்டு மேற்கு மாகாணத்திலிருந்து எவரும் வெளியேற முடியாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகைக்கு மேற்கு மாகாணத்தைச் சேர்ந்த பலர் நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்ல வாய்ப்புள்ளதால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கும் இது பொருந்தும் என்று பொலிசார் தெரிவித்தனர்.

அதன்படி, தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் மேற்கு மாகாண எல்லை வரை மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்கு மாகாணத்திற்குள் ஏதேனும் பேருந்துகள் இருந்தால், அடுத்த திங்கள் வரை மேற்கு மாகாணத்தில் தடுத்து வைக்க வேண்டியிருக்கும் என்று ஊடக பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.