
பேருந்து கட்டணம் 20 சதவீதத்தினால் அதிகரிப்பு (காணொளி)
அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணத்திற்கு சமாந்திரமாக இலங்கை போக்குவரத்து சபையும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் தொடருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொவிட் 19 பரவல் நிலைமைக்கு மத்தியில் பேருந்துகளில் ஆச எண்ணிக்கையில் பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதால் நேற்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகளும் போக்குவரத்து அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.