கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மற்றுமொரு நபர் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மற்றுமொரு நபர் மரணம்

நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இவர் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும், இதனையடுத்து இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் போது இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.