
அனைத்து பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டது
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இடைநிறுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்..
இதேவேளை, மக்கள் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மேல் மாகாணத்திற்குள் நுழையும் தனிநபர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை எனவும் அறிவித்துள்ளார்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்து உள் நுழைவதற்கும் வெளியேறவும் தடை விதிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.