மிரிஸ்ஸ கடலில் பயணித்த மீன்பிடி படகு விபத்து- ஒருவர் மாயம்

மிரிஸ்ஸ கடலில் பயணித்த மீன்பிடி படகு விபத்து- ஒருவர் மாயம்

மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மீன்பிடி படகொன்று மிரிஸ்ஸ-வடக்கு கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து குறித்த படகில் பயணித்த ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் நேற்று (10) இடம்பெற்றதுடன், இதன்போது படகில் பயணித்த நால்வரை காவற்துறையினர் மீட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மிரிஸ்ஸ பகுதியில் வசித்து வரும் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.