புதிய அரசாங்கத்தின் புதிய ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தயார்!

புதிய அரசாங்கத்தின் புதிய ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தயார்!

எதிர்வரும் 2021ஆம் நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நவம்பர் 17ஆம் திகதி மதியம் 1.40 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளார்.

இதனை அடுத்து ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு நவம்பர் 18 முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான மூன்றாவது வாசிப்பு நவம்பர் 23 முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை 21 நாட்களுக்கு விவாதிக்க நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.