நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரிப்பு

கொவிட் 19 தொற்றால் நாட்டில் 42 ஆவது மரணம் இன்று பதிவாகியுள்ளது.

பாணந்துறை பகுதியை சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவரே கொவிட் 19 தொற்றால் மரணமாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காவல்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட மரடைப்பால் அவர் உயிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.