அடுத்த வருடத்திற்கான பாதீட்டு விவாதத்தை 20 நாட்களுக்குள் நடாத்த தீர்மானம்..!

அடுத்த வருடத்திற்கான பாதீட்டு விவாதத்தை 20 நாட்களுக்குள் நடாத்த தீர்மானம்..!

அடுத்த வருடத்திற்கான பாதீட்டு விவாதத்தை 20 நாட்களுக்குள் நடாத்த இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் தலைமையில் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இறுதியாக இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது பாதீட்டு விவாதம் தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை

குறித்த விவாதம் இடம்பெறும் நாட்களின் எண்ணிக்கை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள முடியாமல் போனமை இதற்கு காரணமாகும்.

இதன்போது கொவிட் 19 நிலைமை கருத்தில் கொண்டு பாதீட்டின் மீதான இரண்டாம் வாசிப்பு மற்றும் குழு நிலை விவாதத்தையும் 11 நாட்களுக்குள் மட்டுப்படுத்த ஆளும் கட்சி யோசனை முன்வைத்திருந்தது.

எனினும் அதற்காக 26 நாட்கள் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி கோரியிருந்தது.

எவ்வாறாயினும் இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது பாதீட்டு விவாதத்திற்காக 20 நாட்கள் வழங்குவதற்கு ஆளும் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளது.