டெங்கு நோய் தொடர்பிலும் அவதானம் செலுத்தமாறு கோரிக்கை...!

டெங்கு நோய் தொடர்பிலும் அவதானம் செலுத்தமாறு கோரிக்கை...!

கொரோனா பரவலினை தொடர்ந்து மக்கள் மத்தியில் டெங்கு நோய் தொடர்பிலான அவதானம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

இதனால் மக்கள் டெங்கு நோய் தொடர்பிலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 28,944 பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 34 டெங்கு நோயாளர்கள் இதுவரையில் உயிரிழந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.