
போதுமான அளவு பேருந்துகள் சேவைகளில் ஈடுபடவில்லை - பயணிகள் குற்றச்சாட்டு..!
பயணங்களை மேற்கொள்வதற்கு போதுமான அளவு பேருந்துகள் சேவைகளில் ஈடுபடவில்லை என பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும் போதுமான அளவு பயணிகள் இல்லை என பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் 3264 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
மேலும் இன்று முற்பகல் மாத்திரம் 48 அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினத்தில் மாத்திரம் 150 புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.