கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, துருக்கி சிட்டி பகுதியில் சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 7 கிலோ 815 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையின் பின்னர் கைதாகியுள்ள சந்தேகநபர்  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.