கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்...!
அதிகளவான கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே நேற்றைய தினத்தில் பதிவாகியுள்ளனர்.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 251 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
கம்பஹா மாவட்டத்தில் 18 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 16 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானதாக கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கொழும்பு நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 6 லட்சம் மக்கள் வசிக்கின்றனர் என்பதோடு, அவர்களின் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவண் விஜயமுனி தெரிவித்தார்