
நோர்வூட் வர்த்த நிலையங்களை மூடுவதற்கு ஆலோசனை!
வர்த்தக சங்க உரிமையாளரோடு கலந்துரையாடி நோர்வுட் பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று இரவோடு மூடப்படும் என நோர்வுட் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரனமாக எதிர்வரும் தீபவளி பண்டிகையினை முன்னிட்டு வர்த்தக சங்க உரிமையாளர்களோடு கலந்துரையாடலை மேற்கொண்டதன் பின்னர் இன்று நள்ளிரவோடு நோர்வுட் பிரதேசசபைக் உட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை மூடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
பொகவந்தலாவ கொட்டியாகலை மத்திய பிரிவு பகுதியில் ஆறு தொற்றாளர்கள் இனங்காணபட்டுள்ளதோடு மக்களின் பாதுகாப்பு கருதி மத்திய மாகாண ஆளுநர் லலித்யூ கமகேவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளது.
கடந்த 5ஆம் திகதி எமக்கு இந்த கடிதம் ஆளுநரிடம் இருந்து கிடைக்கபெற்றது இதேவேலை தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு 6ஆம் திகதி அளவில் மக்களுக்கான சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே வர்த்தக சங்க உரிமையாளரோடு கலந்துரையாடி மூடுவற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஆளுனர் அறிவித்திருந்தார் நேற்று ஹட்டன் பகுதிக்கு அநேகமான மக்கள் செல்ல கூடியதை அவதானிக்க கூடியதாக இருந்தது ஆகவே கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கே இந்த நடவடிக்கை எடுக்கபட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.