உள்நாட்டில் கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கியது ஜப்பான்!

உள்நாட்டில் கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கியது ஜப்பான்!

உள்நாட்டில் விதிக்கப்பட்டிருந்த கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகள் அனைத்தையும் ஜப்பான் நீக்கியுள்ளது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் ஒரு கட்டமாக, இந்த அறிவிப்பினை பிரதமர் ஷின்சே அபே நேற்று (வியாழக்கிழமை) இரவு அறிவித்தார்.

இதன்போது அவர் கூறுகையில், ‘ஜப்பானில் பொருளாதார நடவடிக்கைகளை மீட்க முயற்சி செய்கிறோம். உள்நாட்டில் அனைத்துத் தளர்வுகளும் நீக்கப்பட்டுள்ளன. வெளியே செல்லும் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்’ என கூறினார்.

அடுத்த கட்டமாக, வெளிநாட்டுப்பயணிகளை எவ்வாறு உள்ளீர்ப்பது என்பது குறித்து ஜப்பான் அரசு யோசித்து வருகின்றது.

1964ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பான் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. மே மாதத்தில் வெறும் 1,700 பயணிகள் மட்டுமே ஜப்பானுக்குச் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். எனவே சுற்றுலாவை மீட்கும் முயற்சியில் ஜப்பான் இறங்கியுள்ளது.