
5137 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்...!
நாட்டில் நேற்றைய தினம் 430 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்கள் அனைவரும் பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொவிட் 19 நோயாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொவிட் 19 கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 233 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 715 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 667 பேர் நேற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொவிட் 19 தொற்றலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளது.
5 ஆயிரத்து 137 கொவிட் 19 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் மேலும் 4 காவற்துறை உத்தியோகத்தர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.
இதற்கமைய, மேல் மாகாணத்தில் உள்ள காவல்நிலையங்களின் கடமையாற்றும் கொவிட் 19 தொற்றுறுதியான காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 260 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் அவர்களுடன் தொடர்புடைய மேலும் 355 காவற்துறை உத்தியோத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.