இரண்டாம் கொத்தணியான பேலியகொட மீன்சந்தை மாற்றம்

இரண்டாம் கொத்தணியான பேலியகொட மீன்சந்தை மாற்றம்

புறக்கோட்டை, மெனிங் சந்தையை தற்காலிகமாக பேலியகொடவுக்கு இடமாற்றம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மெனிங் சந்தை மூடப்பட்டதன் விளைவாக தங்கள் விளைபொருட்களை விற்க முடியாதமையினால் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரச பொறியியல் கழகத்திற்கு சொந்தமான நிலம் இந்த நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து மெனிங் சந்தை திங்களன்று மீண்டும் மூடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.