வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு! நாடு திரும்பும் இலங்கையர்கள்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு! நாடு திரும்பும் இலங்கையர்கள்

கோவிட் தொற்றுநோயால் டுபாயில் சிக்கித்தவிக்கும் 293 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்கும் தேசிய மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி குறித்த அனைவரையும் இன்று இலங்கைக்கு விமானம் மூலம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கோவிட் வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் வேலை இழந்த இலங்கையர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.