கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி திடீர் மரணம்
ஹம்பாந்தோட்டை கொரோனா வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் உள்ள கொரோனா வைத்தியசாலை இயக்குநர் டாக்டர் சுரங்க உபேசேகர இதை தெரிவித்தார்.
இறந்தவர் கெலனிய - ஹெட்டிகொடவில் வசிக்கும் 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் இந்த மாதம் 1 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் கோவிட் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்ற பின்னர், இன்று வீட்டிற்கு செல்ல ஆயத்தமாகி உள்ளார்.
இதன்போது நெஞ்சுவலி காரணமாக ஹம்பாந்தோட்டையில் உள்ள புதிய பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து இவருடைய மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. இவரது மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.