மலசலகூடக் குழியில் விழுந்து சிறுமி மரணம்! வவுனியாவில் சோகம்
வவுனியா - பன்றிக்கெய்த குளம் பகுதியில் புதிதாக வெட்டப்பட்ட, நீர் நிரம்பிய மலசல கூடக் குழியில் விழுந்து சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்றையதினம் சிறுமியின் பெற்றோர் இல்லாத நிலையில், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தவறுதலாக மலசல கூடக் குழியில் விழுந்துள்ளார்.
பின் சிறுமியின் உறவினர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் குறித்த சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த சத்தியசீலன் சயீவினி(6) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
![]()