கொரோனா மரணங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு!

கொரோனா மரணங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு!

அண்மித்த காலப்பகுதியில் பதிவான கொரோனா மரணங்கள் தொடர்பில் ஆராய குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக தாம் சுகாதார அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அண்மைக்காலமாக பதிவான 23 மரணங்களுள் 50 வீதமானவை வீடுகளிலேயே பதிவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.