சதொச விற்பனை நிலையங்கள் மூலம் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசி விற்பனை
மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்கள் பொறுப்பிலுள்ள உள்ள நெல் மற்றும் நெற்சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல் என்பனவற்றை அரிசியாக மாற்றி கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
சந்தையில் அரிசிக்கான தட்டுபாட்டையும் உத்தரவாத விலைக்கு போதுமான அரிசியை வழங்கவும் அரிசி ஆலைய உற்பத்தியாளர்கள் முன்வராமையினால் அரசாங்கம் இத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
ஆகவே குறித்த அரிசியினை சதொச விற்பனை நிலையங்கள் மூலம் கட்டுப்பாட்டு விலைக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.