மேலும் 4 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது..!
மேல் மாகாணத்தில் காவல்துறை நிலையங்களில் மேலும் 4 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது
இதற்கமைய மேல் மாகாணத்தில் கொவிட் 19 தொற்றுறுதியான காவல்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 260 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் 19 தொற்றுறுதியான காவல்துறை அதிகாரிகள் 6 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன் 250 காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் 355 காவல்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.