இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் பெண்ணுக்கு யாழில் வீடு!

இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் பெண்ணுக்கு யாழில் வீடு!

இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் பெண்ணொருவருக்கு யாழ்ப்பாணத்தில், இராணுவத்தினரால் வீடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் வீடற்ற வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்கும் செயற்திட்டம், யாழ். மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதற்கமைய ஏழு வருடங்களாக இராணுவத்தில் கடமையாற்றும் தமிழ் பெண்மணிக்கு தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J252 பலாலி தெற்கு வசாவிளானில், இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு நேற்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவினால் கையளிக்கப்பட்டது

2014ம் ஆண்டு இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ் பெண்மணி கடந்த ஏழு வருடங்களாக யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் ஊடகப் பிரிவில் கடமையாற்றி வருகின்றார்.

எனினும் அவருக்கு நிரந்தர வீடு இல்லாததன் காரணமாக யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி எடுத்த முயற்சியின் பயனாக குறித்த பெண்மணிக்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் இராணுவ உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்

வீடு கையளிக்கப்பட்டபின்னர் மரக்கன்று ஒன்றும் இராணுவ தளபதியினால் நாட்டிவைக்கப்பட்டதோடு வீட்டு உரிமையாளர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.