மீகொடை ஆயுர்வேத வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா..!!
மீகொடை ஆயுர்வேத வைத்தியசாலை மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வைத்தியர் பேலியகொடை கொத்தணியிலிருந்த தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவருடன் நேரடி தொடர்பிலிருந்ததன் காரணமாக சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
நேற்றைய தினம் (06) திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது 58 வயதுடைய இந்த மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீகொடை ஆயுர்வேத வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.