நாளிதழ் விநியோகத்தில் ஈடுபடும் சிற்றூர்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி வைத்தியசாலையில்...!

நாளிதழ் விநியோகத்தில் ஈடுபடும் சிற்றூர்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி வைத்தியசாலையில்...!

கொழும்பில் இருந்து பதுளை மாவட்டத்திற்கு பத்திரிகை விநியோகத்தில் ஈடுபடும் சிற்றூர்ந்து ஒன்று, இன்று அதிகாலை ஹல்துமுல்ல பகுதியில் விபத்துக்குள்ளானது.

அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த சிற்றூர்ந்து, ஹல்துமுல்ல பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, வீதிக்கு மேற்பகுதியில் உள்ள மண்திட்டிலிருந்து சிறு கல் ஒன்று சரிந்து, சிற்றூர்ந்துடன் மோதியுள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதன்போது, குறித்த சிற்றூர்ந்து வீதியை விட்டு விலகிச் சென்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த சாரதி, தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.