சமய நிகழ்வில் கலந்து கொண்ட மூன்று பெண்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

சமய நிகழ்வில் கலந்து கொண்ட மூன்று பெண்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

மஸ்கெலியா பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மூன்று பெண்களும் மாத்தறை கம்புருபிட்டிய தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இந்த மூன்று தொற்றாளர்களும் இன்றைய தினம் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

மஸ்கெலியா பகுதியில் சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட மூன்று பெண்களும் மஸ்கெலியா பிரன்வ்லோ சாமிமலை கிங்கோரா கவரவில ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களுமே இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.