இலங்கையில் பதிவான 23 ஆவது கொரோனா மரணம் - தகனம் செய்யப்படும் காணொளி..!
கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்றைய தினம் நாட்டில் இரண்டு மரணங்கள் பதிவாகின.
கடந்த 27 ஆம் திகதி கொவிட்-19 தொற்று காரணமாக மூன்று உயிரிழப்புக்கள் பதிவாகின.
இந்த நிலையில், நேற்றைய நாளில் இரண்டு உயிரிழப்புகள் அறிக்கையிடப்பட்டன.
இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றினால், நாளொன்றில் அதிகமான உயிரிழப்புகள் பதிவான இரண்டாவது நாளாக நேற்றைய நாள் அறிக்கையிடப்பட்டுள்ளது.
கொழும்பு - 15 ஐ சேர்ந்த 61 வயது பெண் ஒருவர், தனது வீட்டில் வைத்து நேற்று முன்தினம் மரணித்தார் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அவர் இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்த 23 ஆவது நபராவார்.
மரண பரிசோதனைகளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த பெண், காய்ச்சல், இருமல், தொண்டை வலி முதலான நோய் தன்மைகளினால் பாதிக்கப்பட்டிருந்தாக பிரேத பரிசோதனைகளில் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த பெண்ணின் சடலத்தை தகனம் செய்யும் காணொளியை கீழே காணலாம்...!
இதேநேரம், கொட்டாஞ்சேனை - ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர், கடந்த முதலாம் திகதி தனது வீட்டில் உயிரிழந்த நிலையில், மரண பரிசோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்19 தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டது.
அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அந்த குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண், கொவிட்19 நோயால் ஏற்பட்ட நிமோனியாவினால் உயிரிழந்ததாக அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.