ஒரு மீற்றர் சமூக இடைவெளியை மேலும் அதிகரிப்பது தொடர்பில் நாளை தீர்மானம்

ஒரு மீற்றர் சமூக இடைவெளியை மேலும் அதிகரிப்பது தொடர்பில் நாளை தீர்மானம்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, தற்போது பேணப்படும் ஒரு மீற்றர் சமூக இடைவெளியை மேலும் அதிகரிப்பது தொடர்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் எமது செய்திச் சேவை வினவியபோது பதிலளித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன, இது தொடர்பில் நாளைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.