ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 179 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 179 பேர் கைது

கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 179 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதன்படி, இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 812 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

அதேநேரம், கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரையில் முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.