மகப்பேற்று நிபுணருக்கு கொரோனா..!

மகப்பேற்று நிபுணருக்கு கொரோனா..!

திருகோணமலை பொது வைத்தியசாலையின் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

மகப்பேற்று பிரிவின் சிரேஷ்ட்ட மருத்துவர் ஒருவருக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அவரது கொட்டாஞ்சேனை வீட்டிற்குச் சென்று வந்ததன் பின்னர் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த மருத்துவருடன் பணியாற்றிய ஏனைய மூன்று வைத்தியர்களும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் நிர்வாகத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்