தீபக் ஹூடா அரைசதம்: சென்னைக்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்

கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டு என்ற கட்டாய போட்டியில் பஞ்சாப் அணியால் ஜொலிக்க முடியாமல் 153 ரன்களே எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 53-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

 

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால்3 விக்கெட் வீழ்த்திய லுங்கி நிகிடி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினர்.

 

5.2 ஓவரில் ஸ்கோர் 48 ரன்னாக இருக்கும்போது மயங்க் அகர்வால் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்கோர் 62 ரன்னாக இருக்கும்போது கேஎல் ராகுல் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

 

 

 

 

கிறி்ஸ் கெய்ல் (12), நிக்கோலஸ் பூரன் (2) ஆகியோரை இம்ரான் தாஹிர் வெளியேற பஞ்சாப் அணி 72 ரன்னுக்குள் முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 120 ரன்களை தாண்டுவதே கடினம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

 

மந்தீப் 14 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தாலும் தீபக் ஹூடா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் அணிக்கு சற்று நம்பிக்கையை அளித்தார். அவர் 26 பந்தில் அரைசதம் அடித்ததால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 150 ரன்னை தாண்டியது. பஞ்சாப் அணி கடைசி ஓவரில் 14 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்துள்ளது. தீபக் ஹூடா 30 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

சென்னை அணி சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.