மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பொழிய கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என கூறப்பட்டுள்ளது.