கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தின் அளவை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தின் அளவை அதிகரிப்பதற்காக 90 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டினை மேற்கொண்டு புதிய உபகணரங்களை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகியுள்ளது.
அத்துடன் தற்போது அந்த முனையத்தில் காணப்படும் உபகரணங்களை புதுப்பிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
தற்போதைய கேள்வி மற்றும் எதிர்கால வர்த்தக வாய்ப்புக்களை இலக்காக கொண்டு கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்தின் அளவை அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னர் குறித்த முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.