ஜனாதிபதியை சந்தித்த விமானப்படை தளபதி..!

ஜனாதிபதியை சந்தித்த விமானப்படை தளபதி..!

36 வருடங்களாக சேவையாற்றி எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி ஓய்வு பெறவுள்ள விமானப் படை தளபதி சுமங்கல டயஸ் இன்று ஜனாதிபதியை சந்தித்துள்ளார்

2019ஆம் ஆண்டு மே மாதம் விமானப் படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட அவர் இந்நாட்டின் 17வது விமானப்படைத் தளபதியாவார்.

முப்பது வருட தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பணியாற்றிய அவர், வடமாராச்சி செயல்பாடு பதக்கம், முழு நில சேவைக்கான பதக்கம், தேச புதல்வன் விருது, மூன்று முறை ரணசூர பதக்கம், வடக்கு கிழக்கு செயல்பாட்டுக்கான பதக்கம் என பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.