தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் 11 வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு..!
மீகொடை பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்ய வருகை தந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டமையை தொடர்ந்து தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் 11 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு, அங்கு கடமையாற்றிய 100 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 பேர் உயிரிழந்துள்ளதோடு இறுதியாக உயிரிழந்த இருவர் தொடர்பில் விசாரைணைகள் இடம்பெற்று வருகின்றன.