ஊரடங்கு சட்டத்தின் போதும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்திருக்கும் என அறிவிப்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழமை போல திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பொலிஸ் பிரிவில் குறைந்தபட்சம் மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களையாவது திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜசிங்க குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் , கொழும்பு நகரில் அதிகமான எரிபொருள் நிலையங்களை திறப்பது குறித்தும் தீர்மானிக்கப்படும் என சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.
எவ்வித இடையூறும் இன்றி வழமை போல எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.