விடத்தல்பளையில் தென்பகுதியை சேர்ந்த 37 பேருக்கு கொரோனா...!

விடத்தல்பளையில் தென்பகுதியை சேர்ந்த 37 பேருக்கு கொரோனா...!

விடத்தல்பளையில் தனிமைப்படுத்தலில், தங்க வைக்கப்பட்டிருந்த தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கும் நேற்று கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அதேநேரம், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த இருவருக்கும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுறதியாகியுள்ளது.

குறித்த மூவரும் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்தநிலையில், தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் என யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதேவேளை, பொகவந்தலாவை - கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கொரோனா தொற்றுறுறுதியான இரண்டு பெண்களும் மாத்தறை - கம்புரபிட்டிய தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பேலியாகொட மீன் சந்தைக்கு சென்று பொகவந்தலாவ பகுதிக்கு மீன் ஏற்றி வந்த பாரவூர்தியின் சாரதி ஒருவருக்கு ஞாயிற்றுக்கிழமை கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து அவரது குடும்பத்தை சேர்ந்த மேலும் இரண்டு பெண்களுக்கு தொற்றுறுதியானமை குறிப்பிடத்தக்கது.