வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க இறக்கப்படும் முப்படையினர்!

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க இறக்கப்படும் முப்படையினர்!

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களை கண்காணிப்பதற்காக தினமும் மூன்று கட்டங்களாக மூன்று குழுக்களை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அதிகாலை முதல் முற்பகல் 11 மணி வரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் சரியான முறையில் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றுக்கின்றனரா என்பதை பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட சுகாதார துறையினர் கண்காணிப்பார்கள்.

முற்பகல் 11 மணி முதல் மாலை நான்கு மணி வரை பொலிஸார் இந்த கண்காணிப்பை மேற்கொள்ளவார்கள். இதனையடுத்து மாலை நான்கு மணிமுதல் அதிகாலை வரை முப்படையினர் இந்த கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டால், அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க மாவட்ட வைத்திய அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மடக்குளி சமீட் வீடமைப்பு தொகுதியில் கொரோனா பரவல் ஆபத்து ஏற்பட்ட பின்னர், அந்த வீடமைப்பு தொகுதி மாத்திரமல்லாது, புளுமெண்டால், கொட்டாஞ்சேனை கழக்கு மற்றும் மேற்கு, லுணுபொக்குன பிரதேசம் ஆகிய பகுதிகளில் விசேட பொலிஸ் குழுக்கள்மற்றும் இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.