நேற்றைய தினத்தில் மாத்திரம் 335 பேருக்கு கொரோனா...!

நேற்றைய தினத்தில் மாத்திரம் 335 பேருக்கு கொரோனா...!

நாட்டில் நேற்றைய தினம் 335 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது

.இதனையடுத்து நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று தொற்றுறுதியானவர்களில் 27 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் தொடர்பை பேணிய 202 பேரும், பேலியகொடை மீன் சந்தையில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பை பேணிய 106 பேருக்கும் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 32 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய தொற்றுறுதியான 4 ஆயிரத்து 75 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தொற்றுறுதியான 5 ஆயிரத்து 111 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.