சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் வேலைத்திட்டம்

சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 79 கிராம அபிவிருத்தி திட்டங்கள் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சுமார் 9 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் இந்த அபிவிருத்தி திட்டம் செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் வீதி அபிவிருத்தி, குடிநீர்வசதிகள், பாடசாலை சுகாதாரவசதிகள், வடிகாலமைப்பு, பொதுச் சந்தைகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்கள் என்பன நிறுவும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.