மொரட்டுவையில் 42 பேருக்கும் மட்டக்குளியில் 36 பேருக்கும் கொரோனா..!

மொரட்டுவையில் 42 பேருக்கும் மட்டக்குளியில் 36 பேருக்கும் கொரோனா..!

மொரட்டுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரி்சோதனையை அடுத்து 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

பேலியகொடை மீன் சந்கையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை இனங்கண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த பரிசோதனையின் பின்னரே மொரட்டுவ பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, பொரளையில் 20 பேருக்கும், கொட்டாஞ்சேனையில் 44 பேருக்கும், மட்டக்குளியில் 36 பேருக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.