ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவுள்ள மைக் பொம்பியோ..!

ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவுள்ள மைக் பொம்பியோ..!

அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ நேற்றிரவு 7.35 அளவில் இலங்கையை வந்தடைந்தார்.

அவருடன் 36 பேர் கொண்ட தூதுக்குழு இலங்கை வந்துள்ளது.

இன்று அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவையும் சந்திக்கவுள்ளார்.

பின்னர் இன்று பிற்பகல் செய்தியாளர் சந்திப்பினையும் நடத்துவார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்தனவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வரும் அவர் எம்.சி.சி உடன்படிக்கை குறித்து அவதானம் செலுத்துவார் என்று பரவலாக தெரிவிக்கப்பட்ட போதும், அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது.

இந்த விஜயம் வழமையாக இடம்பெறுகின்ற ஒன்று மாத்திரமே என்றும். ஒப்பந்தங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படாது என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, தமது இலங்கை விஜயத்தில், மைக் பொம்பியோ இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அவதானம் செலுத்துவார் என்று, அமெரிக்காவின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.